திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சாராயமேடு- கண்ணாரம்பட்டு செல்லும் சாலையில் உள்ள மலட்டாற்றில் கட்டப்பட்ட தரைப்பாலம் மலட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக மேம்பாலம் கட்ட வேண்டியது அவசியம்.