சென்னையை அடுத்த வேளச்சேரியில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளது. இந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். ஆனால் வேளச்சேரியில் இருந்து கிண்டி, நந்தம்பாக்கம், ராமாபுரம் வழியாக பூந்தமல்லிக்கு நேரடி பஸ் போக்குவரத்து இல்லை. இதனால் ஒரு சிலர் பணி முடிந்த பின்னர் கிண்டி சென்று பூந்தமல்லிக்கு பஸ் மாறி சென்று வருகின்றனர். இதனால் பணி முடிந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பயணிகளின் நலன் கருதி மேற்கண்ட வழித்தடத்தில் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.