கரூர் மாவட்டம், புலியூர் பஸ் நிறுத்தம் கரூர்-திருச்சி சாலையில் அமைந்துள்ளது. தரகம்பட்டி, வரவணை, காணியாளம்பட்டி,ஜெகதாபி, உப்பிடமங்கலம்,சேங்கல் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி, குளித்தலை, லாலாபேட்டை , மாயனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு புலியூருக்கு வந்தே பஸ் ஏறி செல்கின்றனர் . இதனால் புலியூர் பஸ் நிறுத்த பகுதியில் அதிக அளவில் மக்கள் பஸ்காக காத்திருக்கின்றனர் . அப்படி காத்திருக்கும் பயணிகள் நிழற் குடை வசதி இல்லாததால் வெயில் மழைக்காலங்களில் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு புலியூரில் அதிக அளவில் பயணிகள் அமரும் வகையில் பயணிகள் நிழல் குடை அமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.