திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து அதிகாலையில் தொலைதூர பயணங்களாக காரைக்குடி, வேலூர் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளாக இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டதால் அதிகாலையில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் ஆத்தூர், திருவண்ணாமலை, வேலூர் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.