திருவெண்ணெய்நல்லூரில் வெளியூர் செல்லும் ஒரு சில தனியார் பஸ்கள் பேருந்து நிலையத்திற்குள் வராமல் சுமார் 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் நின்று செல்கின்றன. இதனால் பயணிகள் அங்கு நடந்தோ, அல்லது ஆட்டோக்களில் சென்றோ பஸ்களில் ஏறி வெளியூர் செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. இதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அனைத்து பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் சென்று வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.