கோபி-அந்தியூர் வழித்தடத்தில் 4 டவுன் பஸ்கள் ஒரு மணி அல்லது 1½ மணி நேரம் இடைவெளியில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் அதிக அளவில் பஸ்களில் செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே கோபி-அந்தியூர் வழித்தடத்தில் கூடுதலாக டவுன் பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.