பவானி மற்றும் கவுந்தப்பாடியில் இருந்து கீழ்வானி வழியாக அத்தாணி, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் வரை 4 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை ஊருக்குள் வராமல் மெயின் ரோடு வழித்தடத்திலேயே சென்று வருகின்றன. இதனால் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் 3 கி.மீ. தூரம் மெயின்ரோட்டுக்கு சென்று பஸ் ஏறி வரும் நிலை உள்ளது. எனவே ஊருக்குள் உள்ள கீழ்வானி அரசு நடுநிலைப்பள்ளி நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?