கூடுதல் கட்டணம்

Update: 2025-04-06 10:00 GMT

கோவை ரெயில் நிலையத்தில் இருந்து உக்கடம் பகுதிக்கு செல்லும் வழித்தடத்தில் இயக்கப்படும் சில தனியார் பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து கண்டக்டர்களிடம் கேட்டாலும், உரிய பதில் அளிப்பது இல்லை. இதனால் கண்டக்டர்கள்-பயணிகள் இடையே சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும் தினந்தோறும் பஸ்களில் வேலைக்கு சென்று வருபவர்களுக்கு தேவையில்லாத நிதி இழப்பு ஏற்படுகிறது. எனவே தனியார் பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி