அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர் செல்வதற்கு டவுன் பஸ் வசதி இல்லை. அந்தியூர் செல்ல குறிப்பிட்ட நேரம் மட்டுமே புறநகர் பஸ்கள் மேட்டூர்-அந்தியூர் இடையே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அம்மாபேட்டையில் இருந்து பவானி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பணம் மற்றும் காலம் விரயமாகிறது. மேலும் அந்தியூர் செல்ல அம்மாபேட்டையில் நீண்ட நேரம் பஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே அம்மாபேட்டையில் இருந்து அந்தியூருக்கு டவுன் பஸ்கள் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.