வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2025-03-30 17:53 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தம் ஊராட்சி எலமனம் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த வேகத்தடை அகற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் வேகத்தடை அகற்றப்பட்ட இடத்தில் குண்டும், குழியுமாக காணப்படுவதினால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடை அகற்றப்பட்டுள்ள இடத்தில் மீண்டும் வேகத்தடை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி