நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2025-03-30 17:41 GMT

திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து ஒக்கரை மாராடி வழியாக பி.மேட்டூருக்கு அதிகாலை நேரத்தில் இயக்கப்பட்டு வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு வேளையில் சென்னை, மதுரை, கோவை முதலான தொலைதூரத்தில் இருந்து வரும் பயணிகள் அதிகாலையில் துறையூருக்கு வந்தடைந்து, சுமார் 2 மணி நேரம் பஸ்சுக்காக காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாவதால் நிறுத்தப்பட்ட அதிகாலை பஸ்களை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி