அவசியம் வேகத்தடை

Update: 2025-03-30 16:26 GMT

தர்மபுரி நகரில் உள்ள தர்மபுரி-சேலம் சாலையில் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பிடமனேரி சாலை பிரிகிறது. முன்பு 4 சாலைகள் இணையும் சிக்னல் அமைந்திருந்த இந்த பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைய தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருவழி சாலையாக உள்ளது. இந்த சாலையை பொதுமக்கள் குறுக்காக கடந்து ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு சென்று வருகிறார்கள். இதனால் இந்தப் பகுதியில் அதிக விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க இந்தப் பகுதியில் உள்ள சாலையில் 2 புறங்களிலும் அவசியம் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி