விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-03-30 14:06 GMT

அரியலூர் நகர பகுதியில் ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த நிலையில் ஒரு சில வாகனங்களில் எல்.இ.டி. எனக்கூடிய அதிக ஒளி எழுப்பும் முகப்பு விளக்குகளை பயன்படுத்துவதினால் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்கள் கூசுகிறது. இதனால் அவர்கள் வாகனத்தை குத்துமதிப்பாக ஓட்டும் நிலையில், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விபத்து ஏற்படுத்தும் வகையில் முகப்பு விளக்குகள் அமைத்துள்ள வாகன ஓட்டிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி