அரியலூர்-செந்துறை சாலையில் அதிகளவில் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இதேபோல் மருத்துவமனை, கல்லூரிகளுக்கு செல்பவர்களும் அதிகளவில் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில இளைஞர்கள் இந்த சாலையில் தங்களது இருசக்கர வாகனங்களில் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால் அவர்கள் வேறு வாகனங்களின் மீது மோதி விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் ஒரு சிலர் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். பெண்களும், வயதானவர்களும் இந்த சாலையில் பயணிப்பதற்கே அச்சப்படும் சூழல் தற்போது நிலவி வருகிறது. எனவே போக்குவரத்து போலீசார் இவ்வாறு இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்பவர்களை உரிய முறையில் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.