அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் சாலை ஓரத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.