பழனியில் இருந்து கலிக்கநாயக்கன்பட்டிக்கு அரசு பஸ் வசதி இல்லை. ஒரு தனியார் பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வெளியூருக்கு வேலைக்கு செல்பவர்கள் உள்பட பலர் அவதிப்படுகின்றனர். எனவே கலிக்கநாயக்கன்பட்டிக்கு அரசு பஸ்சை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.