விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்குள் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.