திருச்சி -கீழபுலிவார்டு சாலையோரத்தில் ஏராளமான லாரிகள் நிறுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.