நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் வழியாக குளச்சல் செல்லும் தடம் எண் 5 என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் முள்ளூர்துறைக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. ஆனால், பஸ்சின் கண்ணாடிகளில் நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் வழியாக குளச்சல் செல்வது போலும், பலகையில் முள்ளூர்துறை எனவும் எழுதப்பட்டுள்ளது. இது பயணிகளை குழப்பத்துக்கு உள்ளாக்குகிறது. எனவே, பயணிகள் நலன்கருதி பஸ்சை முறையான வழித்தடத்தில் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.