பஸ் நிறுத்தம் தேவை

Update: 2025-03-16 17:53 GMT

வடலூர் அருகே கருங்குழியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால் பஸ்கள் நிற்காமல் செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வடலூருக்கு சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டு வருவதால் அவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது. எனவே கருங்குழியில் பஸ் நிறுத்தம் அமைத்து அங்கு அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்