வேகத்தடை அமைக்க கோரிக்கை

Update: 2025-03-16 16:52 GMT

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல் நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தின் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தில் சுமார் 10 மேற்பட்ட கிராம மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தான் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் சாலையை கடக்க முயலும்போது வேகமாக வரும் வாகனங்கள் அவர்கள் மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்