தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இருசன் கொட்டாய் கிராமத்திற்கு செல்லும் தார்சாலை பிரிகிறது. இந்த தார்சாலை வழியாக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் சென்று வருகிறார்கள். இந்த தார்சாலையில் பல்வேறு இடங்கள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. எனவே தட்டுத்தடுமாறி செல்லும் வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க தார்சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் முன்வருவார்களா?