அரியலூரிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் முதன்மை சாலையில் வாலாஜா நகரத்தின் கிழக்கு பகுதியில் வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் ஏரிக்கரைக்கு வடக்கு பகுதியில் பழமையான புளியமரம் ஒன்றில் பாதி மரம் பட்டு போய் காற்றில் முறிந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் மோசமான சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.