பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் அகரம்சீகூர் - திருமாந்துறை சாலை குறுகளாக உள்ளது. மேலும் இந்த சாலை ஓரத்தில் கடைகள் உள்ளதால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ஒரே நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் இந்த சாலையை கடக்க முயலும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.