ஆபத்தான பயணிகள் நிழற்குடை

Update: 2025-03-16 10:50 GMT

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், புன்செய்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பீலிப்நகர் பகுதியில் சாலையோரம் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதன் முன் பகுதி மற்றும் இருக்கைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பயணிகள் நடமாட்டத்தின்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி