விபத்து அபாயம்

Update: 2025-03-16 09:23 GMT

நாகர்கோவிலில் இருந்து கீரிப்பாறை செல்லும் சாலையில் இறச்சகுளம் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்துடன் மக்கள் கூட்டம் அதிகாமாக இருக்கும். இந்த சாலையில் இறச்சகுளம் சந்திப்பு உள்பட ஏராளமான இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேகத்தடை மீது அடையாள குறியீடு வரையப்படவில்லை. இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி வேகத்தடைகள் மீது அடையாள குறியீடு வரைந்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிகண்டன், இறச்சகுளம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி