அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் இருந்து முத்துசேர்வாமடம் வழியாக இளையபெருமாள் நல்லூர் கிராமம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுமார் 25-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. இளையபெருமாள் நல்லூர் கிராமத்தில் இருந்து மீன்சுருட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவசர தேவைக்கு உடனே செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவையற்ற இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.