அரசு பஸ் இயக்கப்படுமா?

Update: 2025-03-09 11:46 GMT

கோவை கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளை சார்பில் சோமனூர் பஸ் நிலையத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் சாமலாபுரம், கருகம்பாளையம், செந்தேவிபாளையம் கிராமத்தின் வழியாக சூலூர் வரை தினமும் 4 முறை அரசு டவுன் பஸ் (30 எம்) இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக மாலை ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே பழையபடி அந்த டவுன் பஸ்சை தினமும் 4 முறை இயக்குவதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி