சாலையில் கற்கள்

Update: 2025-03-09 09:51 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய விருந்தினர் விடுதி முன்பு உள்ள சாலையில் நுழைவு வாயிலை ஒட்டி வாகனங்கள் செல்லாமல் இருக்க 2 கற்கள் நடப்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் தடுக்கி விழுந்து காயமடைவதுடன், வாகனங்களில் செல்லும்போது அதன் டயர்களும் சேதமடைகின்றன. எனவே அங்கு நடப்பட்டு உள்ள கற்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி