கோத்தகிரி மார்க்கெட் திடல் அருகே மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையம் அருகே சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் இடையூறு ஏற்படுகிறது. அத்துடன் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்படுவதை முறைப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.