சீரான பஸ் வசதி தேவை

Update: 2025-03-09 08:33 GMT

நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து காலை 7.55 மணிக்கு இனயம் புத்தன்துறைக்கு தடம் எண் 9 என்ற பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை நம்பி காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் காத்திருப்பார்கள். ஆனால் இந்த பஸ் முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால் இந்த பஸ்சிற்காக காத்துநிற்கும் மாணவ-மாணவிகள், ஆசிரிகள், தொழிலாளர்கள் தங்கள் பணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எனவே, இந்த பஸ்சை தினசரி குறித்த நேரத்திற்கு சீராக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி