கொட்டாரத்தில் இருந்து வட்டக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் மகாராஜபுரம் பகுதியில் அனந்தன் கால்வாயின் மேல் பகுதியின் திருப்பத்தில் ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் சாலையோரத்தில் இருபுறமும் விபத்து தடுப்புசுவர்கள் ஒரு அடி உயரம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பாலம் பகுதியில் வரும்போது விபத்தில் சிக்கி கால்வாய்க்குள் விழும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பாலத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட்டுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.