சேலம் திருவாக்கவுண்டனூரில் இருந்து 3 ரோடு செல்லும் வழியில் அபாயகரமான வளைவு உள்ளது. இங்கு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த பகுதியில் போதிய மின் வெளிச்சம் இல்லாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். இதனால் பேரிகார்டு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் மின்விளக்குகளை அதிகப்படுத்தி, பேரிகார்டு மீது ஒளிரும் பட்டைகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.