மதுரையில் இருந்து அலங்காநல்லூர் மற்றும் அ.புதுப்பட்டி வழியாக செல்லும் அரசு பஸ்கள் பஸ் நிலையம் உள்ளே வருவதில்லை. மேலும் இந்த அரசு பஸ்கள் பஸ் நிலையம் வெளியிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை நேரங்களில் அவ்வழியே பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் மாணவ-மாணவிக்ள அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.