அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் வழியாக 20ஏ மற்றும் 20சி, 20டி என்ற அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் நிறுத்தத்தில் நிற்காமல் வெகுதொலைவில் சென்று நிற்கின்றன. இதனால் பயணிகள் நீண்டதூரம் நடந்து சென்று பஸ்களில் பயணம் செய்யும் அவலநிலை ஏற்படுகிறது. எனவே புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.