அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்- விருத்தாச்சலம், ஆண்டிமடம்-ஜெயங்கொண்டம் சாலை மற்றும் ஆண்டிமடம்-ஸ்ரீமுஷ்ணம் ஆகிய சாலைகள் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. இந்த மழைநீர் வடிகால் வாய்க்காலின் மேற்பகுதியில் சுமார் நான்கு அடி அகலத்திற்கு கான்கிரீடாலான தளம் அமைத்து மூடி போடப்பட்டு உள்ளது. இந்த மழை நீர் வடிகால் வாய்க்கால் காங்கிரீட் தளத்தை ஆக்கிரமித்து இருபுறமும் உள்ள கடைக்காரர்கள் தங்களது பொருட்களை மழைநீர் வடிகால் வாய்க்கால் மேல் வைத்தும், சிலர் அவர்களது கடையின் முன் தகரக் கூரையை ரோடு வரை இழுத்துப் போட்டுள்ளதால் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.