வர்ணம் பூசப்படாத வேகத்தடை

Update: 2025-03-02 09:49 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பேரளி முதல் மருவத்தூர் வழியாக பனங்கூர் வரை செல்லும் சாலையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் பாதுகாப்பு கருதி ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு தனியாகத் தெரியும்படி ஒளிரும் விளக்குகளோ அல்லது வெள்ளை வர்ண கோடுகளோ பூசப்படவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி