நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து புதூர் வரை தடம் எண் 38 ‘டி’ அரசு பஸ் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் சீராக இயக்கப்படுவதில்லை. இதனால், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி அரசு பஸ்சை சீராக இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.