பஸ் வசதி

Update: 2025-02-23 15:08 GMT

அந்தியூர்- கோபி மார்க்கமாக காலை 6.50 மணிக்கு 20 டி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அடுத்த பஸ் 9.15 மணிக்கு செல்கிறது. அதற்கு முன்னே வகுப்புகள் தொடங்கிவிடுவதால் அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கூலி வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தினமும் காலையில் தனியார் மற்றும் புறநகர் பஸ்களில் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. அனைவரின் நலன்கருதி காலை 8.20 மணிக்கு அரசு டவுன் பஸ் கோபி மார்க்கமாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி