பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வரகூர் பழைய காலனி தெருவில் சாலையோரம் அதிக அளவில் கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. மேலும் இவை இந்த வழியாக செல்லும் மின் கம்பிகளில் உரசுவதினால் மழைக்காலங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் இரண்டு வாகனங்கள் சாலையை கடக்கும் போது, சாலையோரம் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த கருவேல மரங்களில் உரசி காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.