அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் உள்ள பெரிய திருக்கோணம் செல்லும் சாலையில் சின்ன ஏரி உள்ளது. இங்குள்ள சின்ன ஏரி கரை அருகே சிறுபாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாலத்தின் மேற்கு புறத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.