பல்லடம் தாலுகாவில் அமைந்துள்ள காரணம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சோமனூர் பஸ் நிலையம் செல்வதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தால் அதிக கட்டணம் தந்து ஆட்டோவில்செல்லும் நிலை உள்ளது. இதனால் பயணிகளுக்கு கால விரயம், பணம் செலவு ஏற்படுகிறது. இது கருத்தில் கொண்டு சூலூர் அரசு போக்குவரத்து கிளையில் இருந்து உக்கடத்தில் இருந்து சூலூர் வழியாக காரணம் பேட்டை வரை சென்று திரும்பி 19 பி மற்றும் காந்திபுரத்தில் இருந்து சூலூர் வழியாக காரணம்பேட்டை வரை சென்று திரும்பும் 19 சி நகர்ப்புற பஸ்களை 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோமனூர் பஸ் நிலையம் சென்று திரும்பும் வரை இயக்கினால் பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?