கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாரம் பஸ் நிறுத்தம் தபால் நிலையத்தின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தம் கொட்டாரம் சந்திப்புக்கு அருகில் உள்ளது. பஸ்கள் தபால் நிலையத்தின் முன் நிற்கும்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பஸ் நிறுத்தத்தை கொட்டாரம் சந்திப்புக்கு மாற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.