அரசு பஸ்களை இயக்க வேண்டும்

Update: 2025-02-16 16:40 GMT

ஒட்டன்சத்திரம் தாலுகா புதுச்சத்திரத்தில் இருந்து சட்டயப்பனூர் வரை சாலை சீரமைப்பு பணி கடந்த சில மாதங்களாக நடக்கிறது. இருந்த போதிலும் இந்த வழியாக தனியார் பள்ளி வாகனங்கள், லாரிகள் வந்து செல்கின்றன. ஆனால் அரசு பஸ்கள் வருவதில்லை. இதனால் சட்டயப்பனூரில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதுச்சத்திரம் வரை நடந்து சென்று அங்கிருந்து பஸ்சில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்