அந்தியூர் அருகே புதுமேட்டூரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.