அந்தியூர் பஸ் நிலையம் அருகே கெட்டிவிநாயகர் கோவில் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் ரோட்டோரம் உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நிறுத்தத்தில் பஸ்களில் ஏறும்போதும், இறங்கும்போதும் மிகவும் சிரமப்படுகின்றனர். பயணிகள் நிலைதடுமாறி கால்வாய்க்குள் விழ வாய்ப்புள்ளது. சாக்கடை கால்வாயை சீரமைக்கவும், பயணிகள் நலன் கருதி ரோட்டோரத்தில் புதிதாக நிழற்குடை வசதி ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் முன்வருவார்களா?