சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தற்போது புதிதாக பஸ் நிலையம் கட்டி திறக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.