சேத்தியாத்தோப்பில் இருந்து அகரஆலம்பாடி வழியாக விருத்தாசலம் வரை அரசு பஸ் இயக்கப்படுகிறது. இவ்வழியாக கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதை தவிர்க்க மேற்கண்ட பகுதி வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.