அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் முதல் குருவாடி வரை குறுகலாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.