பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட சாமளாபுரம் பேரூராட்சியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கள்ளபாளையம் கிராமத்திற்கு காலை 6 மணி அளவில் டவுன் பஸ் ஒருவேளை மட்டும் வந்து செல்கிறது. அதன்பின்னர் பஸ் வசதி இல்லாததால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் ஆட்டோவில் செல்லும் நிலை உள்ளது. எனவே காலை மாலை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் நகரப்புற பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
====